2016 ஆம் ஆண்டில், மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம், திட கழிவு மேலாண்மை விதிகள், 2016 மற்றும் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் 2016 ஆகியவற்றை அறிவிப்பு செய்துள்ளது.

 

திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016


திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016, விதி 15-ன் படி திடக்கழிவுகளை சேகரித்தல், வாகனங்கள் மூலமாக எடுத்துச்செல்லுதல், செயல்முறைக்குள்ளாக்குதல், மறுசுழற்சி செய்தல், சுத்திகரிப்பு செய்தல் மற்றும் வெளியேற்றுதல் ஆகிய பொறுப்புகள் அனைத்தும் உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்தது. திடக்கழிவுக்களை கையாளுவதற்கு கட்டணமும் மற்றும் உடனடி அபராதமும் விதிபதற்கான துணைச் சட்டங்கள் அனைத்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளாளும் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு, திடக்கழிவு மேலாண்மை விதிகளை திறம்பட செயல்படுத்தும் பொருட்டு 25.01.2017 தேதியிட்ட அரசாணை எண். 5 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (MA.IV) துறை வாயிலாக மாநில அளவிலான ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள், 2016


பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள், 2016 விதி 6 மற்றும் 7-ன் படி பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து எடுத்தல், சேகரித்தல், சேமித்தல், வாகனங்கள் மூலமாக எடுத்துச்செல்லுதல், செயல்முறைக்குள்ளாக்குதல் மற்றும் வெளியேற்றுதல் ஆகியவற்றை செயல்படுத்துவதற்காக உள்கட்ட அமைப்பை உருவாக்கவும் மற்றும் மேம்படுத்தவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. .

தமிழ்நாடு அரசு, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளை திறம்பட செயல்படுத்தும்பொருட்டு 23.10.2016 தேதியிட்ட அரசாணை எண். 148 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (MA.IV) துறை வாயிலாக மாநில அளவிலான ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது