பிளாஸ்டிக் எனப்படும் நெகிழிப் பொருள் பெட்ரோலிய வேதிப்பொருட்களிலிருந்து பெறப்படும் பொருளாகும்.
பொதுவாக, பிளாஸ்டிக் அல்லது நெகிழிப் பொருட்களை அதன் அமைப்பு, அதனை உருவாக்க பயன்படுத்தப்படும் வேதியியல் முறைகள் மற்றும் இயற்பியல் பண்புகளுக்கு ஏற்ப வகைபடுத்தப்படுகிறது. ஆயினும், பிளாஸ்டிக் பொருட்கள் இளகும் வகை மற்றம் இறுகும் வகை என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
இளகும் வகையானது வெப்பத்தால் இளகி, பின் குளிர்வித்தலால் மீண்டும் இறுகக்கூடிய தன்மை பெற்றது. இவ்வாறாக எத்தனை முறையும் இளகி இறுகக் கூடிய தன்மை பெற்றதால் மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தக்கூடிய நெகிழியாகும்
உதாரணம்: பாலிஎத்திலின், பாலிபுரோப்பிலின், பாலிஸ்டைரின், மற்றும் பாலிவினைல் குளோரைடு.
இறுகும் நெகிழியானது, இளக்கி பின் மீண்டும் இறுகிய பின், மீண்டும் வெப்பப்படுத்தி இளக்க முடியாத, மீளாத நெகிழியாகும்.
உதாரணம்: கந்தக வலிவூட்ட முறையால் ரப்பரை கடினப்படுத்துதல்
பிளாஸ்டிக் மறுசுழற்சி என்பது, திரும்பப்பெறப்பட்ட கழிவு பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் துண்டுகள் ஆகியவற்றை மறுசெயலாக்க முறையில் உபயோகமான பொருளாக மாற்றுவதாகும். பொரும்பான்மையான பிளாஸ்டிக் பொருட்கள் மக்காதத் தன்மையுடையவையாக இருப்பதால், பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கான முயற்சி உலகளவில் மேற்கொள்ளப்படுகிறது.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பின்வருமாறு:-
1. பிளாஸ்டிக் வேதிப்பொருட்கள் (எடுத்துக்காட்டு - தாளடுகள், பிளாஸ்டிஸைசர், ஸ்டியரிக் அமிலம்) சேகரமாகும் பண்புடையவை.
2. மலட்டு தன்மையை உருவாக்கும் ஹார்மோன் செயற்பாட்டினை தூண்டுகிறது.
3. நீர்வழிகளில் அடைத்துக்கொள்வதால் கொசு உற்பத்தி, மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் வர காரணமாகிறது.
4. மழைநீர் உறிஞ்சப்படுதலை தடுத்து நிலத்தடி நீர் மட்டம் குறைய வழிவகுக்கிறது.
5. மண்ணரிப்பை ஏற்படுத்துகிறது.
6. திறந்தவெளியில் பிளாஸ்டிக்கை எரிப்பதால் நச்சுத்தன்மை உடைய வாயுக்கள் வெளியேறுகிறது.
இவ்வாண்டின்(2018) உலக சுற்றுச்சூழல் தின கருப்பொருளான ‘பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் மாசு ஒழிப்பினை’ இந்தியா முன்னின்று நடத்துகிறது. இதன் பொருட்டு, அரசாங்கம், தொழிற்சாலைகள், சமூகங்கள் மற்றும் தனிமனிதர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களை கண்டறிந்து, பிளாஸ்டிக் உற்பத்தியை குறைத்து, கடல்வாழ் மற்றும் மனித வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.