ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் குப்பைகள் சுற்றுச்சூழலுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஆகவே அவைகளை முறையாக சேகரித்து, மறுசுழற்சி மூலம் விஞ்ஞான ரீதியில் மறுஉபயோகத்திற்கு பயன்படுத்தப்படவேண்டும்.

 

பொதுவாக இளகும் பிளாஸ்டிக் பொருட்களின் தன்மைக்கேற்ப, பாலிஎத்திலின், பாலிபுரோப்பிலின், பாலிஸ்டிரின்,.
மற்றும் பாலிவினைல் குளோரைடு போன்றவைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றின் இளகும் தன்மைக்கேற்ப, மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு, பல பயனுள்ள வீட்டுஉபயோக பொருட்கள் தயாரிக்கப்பயன்படுத்தப்படுகின்றன.
தற்காலத்தில் விஞ்ஞான வளர்ச்சியினால் சாலைகள் அமைப்பதற்கு பிளாஸ்டிக் குப்பைகள் பயன்படுத்தப்படுகின்றன.

 

இறுகும் வகையான பிளாஸ்டிக் குப்பைகளின் எரிதிறன் தன்மையால் மின் உற்பத்தி மற்றும் சிமெண்ட் தொழிற்சாலைகளில் இணை எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

 

தற்பொழுது நடைமுறையிலுள்ள பிளாஸ்டிக் மறுசுழற்சியினை திறம்படுத்தி செயல்படுத்துவதன் மூலம் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பயன்பாடு சமன்படுத்தப்பட்டு மத்திய அரசின் "தூய்மை இந்தியா" என்ற குறிக்கோளை அடைய முடியும்.