தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் குப்பைகளால் ஏற்படும் சீர்கேடுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது அவைகளில் சில பின்வருமாறு.

 

பிளாஸ்டிக் குப்பைகளினால் ஏற்படும் மாசு குறித்து, சுற்றுச்சூழல் அரங்கத்திலிருந்து கிண்டி சிறுவர் பூங்கா வரை மாணவப்பேரணியை 05.06.2018 அன்று மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் துவங்கி வைத்தார்..

 

மற்ற மாவட்ட அலுவலகங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்.:

திண்டுக்கல் மாவட்டம் :

• டட்லி பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் கைப்பைகளை உபயோகப்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்தனர்.

• நுகர்வோர் உற்பத்தி நிலையம், திண்டுக்கல் மற்றும் சுற்று சூழல் சங்கம், திண்டுக்கல் மூலமாக 1000 துணி கைப்பைகள் அச்சிடப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

• பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கிடையே ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

• பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்த 200 சுவரொட்டிகள் அச்சிடப்பட்டு திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டன.

 

விருதுநகர் மாவட்டம்:

• விருதுநகர் மாவட்ட பள்ளி மாணவர்கள் 05.06.2018 அன்று பிளாஸ்டிக் கைப்பைகள் உபயோகப்படுத்த மாட்டோம் என விருதுநகர் பேருந்து நிலையத்தின் முன்பு மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி எடுத்தனர்

• 06.06.2018 அன்று அரசினர் மேல்நிலைப் பள்ளி, வீரர்பட்டி, விருதுநகர் மாவட்ட மாணவர்கள் பிளாஸ்டிக் கைப்பைகள் உபயோகப்படுத்த மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்து நடத்தினர்.

• அரசினர் மேல்நிலைப் பள்ளி, வீரர்பட்டி, விருதுநகர் மாவட்ட மாணவர்களால் வீரர்பட்டி கிராமத்தில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.