1. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு (முழு விவரங்களையும் பார்வையிட)

 

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் விதி எண் 110 -ன் கீழ் 05.06.2018 அன்று சட்டமன்ற பேரவையில் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் தடை பற்றிய அறிவிப்பு.

 

2 . மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் (முழு விவரங்களையும் பார்வையிட)


சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசாணை (நிலை). எண் . 82 நாள் 15.06.2018 ஆணைப்படி, தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடையை செயல்படுத்த மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான மண்டலங்கள் ஒதுக்கப்பட்ட அறிவிப்பு.

 

3. பிளாஸ்டிக் தடை அறிவிப்பு (முழு விவரங்களையும் பார்வையிட)

 

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசாணை (நிலை). எண் . 84 நாள் 25.06.2018 கெஜட்டில் பிளாஸ்டிக் தடை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

4 . வழிகாட்டி குழு (முழு விவரங்களையும் பார்வையிட)

 

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசாணை (நிலை). எண் . 92 நாள் 05.07.2018 ஆணைப்படி, 01.01.2019 முதல் தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாக கண்காணிப்பதற்கு, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் பத்து உறுப்பினர்களை கொண்ட ஒரு வழிகாட்டி குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

5 . நிதி வழங்கல் (முழு விவரங்களையும் பார்வையிட)

 

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசாணை (2டி). எண் .30 நாள் 05.07.2018 ஆணைப்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 'பிளாஸ்டிக் மாசு இல்லா தமிழ்நாடு' என்ற இலக்கை அடைவதற்கு மண்டல அளவில் பயிற்சிகள் நடத்த ரூபாய் 54 லட்சம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

 

6 . அரசாங்க துறைகள் / நிறுவனங்கள் / பொது நிறுவனங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை (முழு விவரங்களையும் பார்வையிட)

 

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசாணை (டி). எண் .265 நாள் 20.09.2018 ஆணைப்படி, அரசாங்க துறைகள் / நிறுவனங்கள் / பொது நிறுவனங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை.

 

7 . தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய ஒருங்கிணைப்பாளர்கள் (முழு விவரங்களையும் பார்வையிட)

 

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசாணை (டி). எண் .319 நாள் 10.11.2018ஆணைப்படி, தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடையை செயல்படுத்த மண்டல ஒருங்கிணைப்பாளர்களுக்கு உறுதுணையாக செயல்பட தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்ட அறிவிப்பு.