தடை செய்யப்பட்ட பொருட்கள் குறித்த கேள்விகள்

Lights
உணவுப்பொருட்களை கட்ட உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்
Nature
உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக்/பிளாஸ்டிக் பூசப்பட்ட தாள்
Fjords
தெர்மக்கோல் தட்டுகள்

Fjords
பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள்

Fjords
பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள்

Fjords
பிளாஸ்டிக் தேநீர் குவளைகள்

Fjords
பிளாஸ்டிக் குவளைகள்

Fjords
தெர்மோக்கோல் குவளைகள்

Fjords
நீர் நிரப்ப பயன்படும் பைகள்/பொட்டலங்கள்

Fjords
பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள்

Fjords
பிளாஸ்டிக் பைகள் (எந்த அளவிலும், எந்த தடிமனாக இருப்பினும்)
Fjords
பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதப் பைகள்

Fjords
பிளாஸ்டிக் கொடிகள்

Fjords
நெய்யாத பிளாஸ்டிக் தூக்கு பைகள்
சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அரசாணை எண் 84 நாள் 25.06.2018 ன் படி ஒரு முறை பயன் படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடை 01.01.2019 முதல் தமிழகத்தில் அமுலுக்கு வருகிறது.
தமிழ்நாடு அரசு ஆணையின் படி 01.01.2019 முதல் அனைத்து விதமான பிளாஸ்டிக் கைப்பைகளை எந்த அளவிலும், எந்த தடிமனாக இருப்பினும் பயன்படுத்த தடைசெய்யப்பட்டுள்ளது.
Lights Lights Lights Lights
நெய்யப்படாத கைப்பைகள் (Non woven carry bags), பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்படுவதால் அதுவும் தடை செய்யப்பட்டுள்ளது.
Lights Lights
தெர்மோகோல் மூலம் தயாரிக்கப்படும் கப்புகளும், தட்டுகளும் ஒரு வகையான தெர்மோ பிளாஸ்டிக் கொண்டு தயாரிப்பவையே ஆகும். எனவே, இதுவும் தடை செய்யப்பட்ட பட்டியலில் உள்ளது.
Lights Lights
சிப்பெட் நிறுவனத்தின் அறிக்கையின் படி காகித குவளைகளில் எத்திலின் மற்றும் பாலி வினைல் அசிடேட் எனும் செயற்கை பாலிமர் பூசப்பட்டுள்ளதால் அவை எளிதில் மக்குவதில்லை. எனவே அது தடை செய்யப்பட்டுள்ளது.
Lights Lights

மாற்று பொருட்கள் குறித்த கேள்விகள்

Lights
வாழை இலை,
பாக்குமர தட்டு
Nature
அலுமினியத்தாள்

Fjords
காகித சுருள்

Fjords
தாமரை இலை

Fjords
கண்ணாடி/ உலோகத்தால் ஆனை குவளைகள்
Fjords
மூங்கில் / மரம் / மண்பொருட்கள்
Fjords
காகித உறிஞ்சு குழாய்கள்

Fjords
துணி / காகிதம் / சணல் பைகள்

Fjords
காகிதம் / துணி கொடிகள்

Fjords
பீங்கான் பாத்திரங்கள்

Fjords
உண்ணக்கூடிய தேக்கரண்டிகள்

Fjords
மண் பாத்திரங்கள்

துணி மற்றும் சணல் பைகள், பனை ஓலை தயாரிப்புகள், உலோக பொருட்கள், கண்ணாடிப்பொருட்கள், பீங்கான் பொருட்கள் மற்றும் பல.
Lights Lights Lights
பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளின் விவரங்களை கீழ்கண்ட இணைய தல முகவரியில் அறிந்து கொள்ளலாம்.
Plastic Pollution Free Tamilnadu
http://www.ecoideaz.com/green-directory

விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் குறித்த கேள்விகள்

மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் என்பது நுண்ணுயிரிகள் மூலம் சிதைக்கப்பட்டு கரியமிலவாயு, நீர், கனிம சேர்மங்கள் மற்றும் உரமாக மாறக்கூடியது ஆகும்.
மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் ஸ்டார்ச் அல்லது புரோட்டீன் ஆகியவை கலந்த கலவை பொருட்களால் தயாரிக்கப்படுகின்றது.
Lights Lights
மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் இந்திய தரநிர்ணயம் IS: 17088:2008-ன் படி தயாரிக்கப்பட வேண்டும். மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள் தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் சான்று பெறவேண்டும்.
பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன் படி மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
Lights Lights
உணவு பாதுகாப்பு தரம் மற்றும் இந்திய தர நிர்ணயம் படி உள்ள உணவுதர பிளாஸ்டிக் ஐ பயன்படுத்தலாம். இணையதள முகவரி www.fssai.gov.in. தயாரிப்பு/உற்பத்தி தொழிற்சாலைகளில் ஒருங்கிணைந்த முறையில் பொருட்களை அடைத்து வைக்கப் பயன்படும் பிளாஸ்டிக் பைக்களுக்கு தடை இல்லை.
Lights Lights Lights Lights
உணவு பாதுகாப்பு தரம் மற்றும் இந்திய தர நிர்ணயம் படி உள்ள பிளாஸ்டிக் கவர்களைப் பயன்படுத்தலாம். இணையதள முகவரி www.fssai.gov.in
பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பெட் பாட்டில்கள் தடைசெய்யப்பட்ட பட்டியலில் இல்லை.
Lights Lights Lights Lights
மறுசுழற்சி செய்யப்படும் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களும் தடை செய்யப்படவில்லை. ஒரு முறை பயன் படுத்தப்பட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் மிக அதிகமாக அன்றாட பயன்பாட்டில் உள்ளன. இப்பொருட்கள் சரிவர சேகரிப்பு செய்து மறுசுழற்ச்சிக்கு அனுப்பப்படாமல் ஆங்காங்கே வீசி ஏறியப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு அடைகின்றது. இதனை தவிர்க்கும் பொருட்டு சில குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மட்டும் தடை செய்யப்பட்டுள்ளது.
Lights Lights Lights Lights
பல அடுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி உகந்து அல்ல. அதனை சிமெண்ட் தொழிற்சாலைகளில் உப-மூலப்பொருளாகவும் (ஊடி-ஞசடிஉநளளiபே), தார் சாலை போடுவதற்கும் மற்றும் வெப்பச்சிதைவு மூலம் எரிசக்தி தயாரிப்பதற்கும் பயன்படுத்தலாம்.
Lights Lights
பொருட்களை சப்பமிட பயன் படுத்தப்படும் அனைத்து வகை பாலி பைகளுக்கும் தடை இல்லை.
Lights Lights Lights Lights

தடை மீறுபவர்களுக்கு உரிய நடவடிக்கை குறித்த கேள்விகள்

சுற்றுச்சூழல் மற்றும் வன துறை அரசாணை எண் 84 நாள் 25.06.2018-ன்படி

a. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேமித்து வைத்தாலோ, வழங்கினாலோ போக்குவரத்து செய்தாலோ விற்பனை செய்தாலோ விநியோகித்தாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி ஆணையர்களுக்கும் இதர பகுதிகளில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

b. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் தடை உத்தரவினை மீறுபவர்கள் மீது, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவு நீக்கம் குறித்த கேள்விகள்

சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை உள்ளாட்சி அமைப்புகளிடன் கொடுக்கலாம் அல்லது தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட பிளாஸ்டிக் மறுசுழற்சியாளர்களிடம் ஒப்படைக்கலாம். பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்ட பிளாஸ்டிக் மறுசுழற்சியாளர்களின் பட்டியல் தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணைய தளத்தில் இருந்து தரவிரக்கம் செய்து கொள்ளலாம். இணைய தள முகவரி Visit website

இதர கேள்விகள்

பிளாஸ்டிக் என்பது பெட்ரோலியம் சார்ந்த பாலிமரால் செய்யப்பட்ட பொருள் ஆகும். இது ஹைட்ரோ கார்பன்களின் எண்முகச்சேர்ம சங்கலியாக அமைந்துள்ளது
Lights
பிளாஸ்டிக் பொருட்கள் எந்த வகையான இரசாயண கலவைகளால் தயாரிக்கப்படுகிறது என்பதற்கிணங்க 7 வகையாக பிரிக்கப்படுகின்றது. PETE, HDPE, LDPE, PP, PS, PV மற்றும் பல.
Lights
பிளாஸ்டிக் ஒரு அரிய கண்டுப்பிடிப்பு ஆகும். அதன்பயன்பாடு பெருமளவில் மக்களுக்கு நன்மை அளிக்கின்றது. பிளாஸ்டிக் பொருட்கள் மக்கும் தன்மை அற்றதாகும். எனவே பயன்படுத்திப்பட்ட பிளாஸ்ட்டிக் கழிவுகள் கரிவர கையாளப்படவில்லை எனில் அது மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்குவிளைவிக்கும்.
Lights Lights
ஒரு முறை பயன் படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் நிலத்தை, நீர் ஆதாரங்களை, வடிகால்களை அடைத்து கொள்கிறது. இதனால் நிலத்தடி நீர் உட்புகாமல் மீள் நிரப்பு தடுக்கப்படுகிறது. மேலும் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறாமல் நிலத்தின் மேல் தங்கி, தேங்கி நிற்பதால் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
Lights Lights
பிளாஸ்டிக் இயற்கையாக சிதைவடைவதற்கு 200 ஆண்டுகளுக்கும் மேல் ஆகும்.
பிளாஸ்டிக் பொருட்களை திறந்தவெளியில் எரிக்கக்கூடாது. நகராட்சி திடக்கழிவுடன் பிளாஸ்டிக் சேர்த்து எரிக்கப்படும்போது, அதிலிருந்து டையாக்ஸின், பியூரான் போன்ற நச்சுவாயுக்கள் வெளியேற்றப்படுகிறது. இவை புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியதாகும்.
Lights Lights
பிளாஸ்டிக் பயன்பாட்டினை குறைத்தல், திரும்பப்பயன்படுத்துதல், மறுசுழற்சி செய்தல் மற்றும் மீட்பு செய்தல் பிளாஸ்டிக் மேலாண்மைக்கு ஆரோக்கியமான வழிகள் ஆகம்.
Lights Lights
பிளாஸ்டிக்கினை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். அவை, தெர்மோ பிளாஸ்டிக் மற்றும் தெர்மோ செட்டிங் பிளாஸ்டிக். இதில் தெர்மோ பிளாஸ்டிக் மட்டும் மறுசுழற்சிக்கு உட்படுத்தலாம். தெர்மோ செட்டிங் பிளாஸ்டிக் மறுசுழற்ச்சிக்கு உட்படுத்த முடியாது.
Lights
தெர்மோ பிளாஸ்டிக் (மறுசுழற்சிக்கு உட்படுத்தலாம்)
Nature
தெர்மோ செட்டிங் பிளாஸ்டி (மறுசுழற்ச்சிக்கு உட்படுத்த முடியாது)
தெர்மோ செட்டிங் பிளாஸ்டிக் கழிவுகளை சிமெண்ட் ஆலைகளில் இணை எரிபொருளாக (Co-processing) பயன்படுத்தலாம்.
Lights
விளையாட்டு பொருட்கள், சமையல் அறைப் பொருட்கள் மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்கு உகந்த பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
Lights Lights
மறுசுழற்ச்சி மூலம் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களிலிருந்து நச்சுக் கசிவு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதால், உணவு உண்பதற்கு பயன்படுத்தக்கூடாது.
Lights Lights
வீட்டு உபயோக கழிவுகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை மற்றும் நச்சுத்தன்மை கொண்ட கழிவு என மூன்று வகைகளாக தரம்பிரித்து உள்ளாட்சி அமைப்புகளின் அறிவுரைப்படி கழிவு சேகரிப்பவர்களிடம் கொடுக்க வேண்டும்.
Lights
நீட்டிக்கப்பட்ட தயாரிப்பாளர் பொறுப்பு என்பது- பொருளை தயாரிப்பவர்கள் அவர்கள் தயாரிக்கும் பொருள்கள் அதன் பயன்பாடு முழுமை அடைந்த பின்பும் அவை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காவண்ணம் அதன் கழிவுகளை சேகரிப்பு செய்து அகற்றுவது ஆகும்.
Lights
தயாரிப்பாளர் பொறுப்பு நிறுவனம் என்பது, பொருள் தயாரிப்பாளரால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தயாரிப்பாளர்களால் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்ட பொருட்களின் பயன்பாடு முடிந்தவுடன் அவை கழிவுகளாக வெளியேற்றப்படும்போது அதனை முறையாக சேகரிப்பு செய்து மறுசுழற்சிக்கு அனுப்பும் பணியினை மேற்கொள்ளும்.
இது குறித்து தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினை கீழ் கண்ட விலாசத்தில் தொடர்பு கொள்ளலாம்
தொழில் மற்றும் வணிக ஆணையரகம்,
சிட்கோ தலைமை அலுவலக வளாகம் ( 2வது மற்றும் 3 வது தளம்),
கிண்டி, சென்னை 600032
அந்தந்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அவர்களை தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரியை வாரியத்தின் இணைதள முகவரியில் காணலாம். Visit website
ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் பணியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுடன் அனைவரும் இணைந்து தமிழ்நாட்டை பிளாஸ்டிக் மாசில்லா மாநிலமாக மாற்றும் பணியில் ஈடுபடலாம்.
Lights